செய்திகள்

கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியின் மரணத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2018-01-05 11:59 GMT   |   Update On 2018-01-05 11:59 GMT
சிறுமி கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் மரணத்தண்டனை பெற்ற குற்றவாளியின் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்தியப்பிரதேசம் மாநிலம் கிவாலியார் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் வீரேந்திரா என்பவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் மரணத்தண்டனை வழங்கப்பட்டது. அவரது தண்டனையை மத்தியப்பிரதேச மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

இது குறித்து உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், 'இது போன்ற குற்றங்கள் செய்தவரை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையை பார்த்து மற்றவர்கள் தவறு செய்ய பயப்பட வேண்டும். அதனால் வீரேந்திரனுக்கு மரணத்தண்டனை வழங்கப்பட வேண்டும்' என கூறியது.

உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து வீரேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது வழக்கை விசாரித்த மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மாநில அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வீரேந்திரனின் மரணத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் தண்டனை விவரங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News