செய்திகள்

விபத்து பயம் காரணமாக நீண்ட தூர பைக் பயணத்தை தவிர்த்தேன்: மனோகர் பாரிக்கர்

Published On 2018-01-14 23:05 GMT   |   Update On 2018-01-14 23:05 GMT
விபத்து பயம் காரணமாகவே பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்த்து வந்தேன் என கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பனாஜி:

விபத்து பயம் காரணமாகவே பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்த்து வந்தேன் என கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

கோவா தலைநகர் பனாஜியில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் தொண்டர்களிடையே பேசியதாவது:

நீங்கள் எப்போது பைக்கில் பயணம் செய்வீர்கள்? என பொதுமக்கள் அடிக்கடி என்னிடம் கேள்வி கேட்பது வழக்கம். நான் பைக்கில் பயணம் செய்வதில்லை என அவர்களிடம் பதில் கூறினேன்.

நான் எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்டிருப்பேன். என் மனதில் வேலை சம்பந்தப்பட்ட எண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன. இதனாலேயே நான் பைக்கில் நீண்ட தூரம் செய்வதில்லை. விபத்து நேர்ந்து விடும் என்ற பயம்தான் அதற்கு காரணம். எனவே நான் பைக் பயணத்தை விரும்புவதில்லை.

மேலும், கோவாவில் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தனது அரசு எடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News