செய்திகள்

மும்பை: ஐபோன்-8க்கு பதிலாக சோப்பு அனுப்பிய பிளிப்கார்ட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

Published On 2018-02-01 20:44 GMT   |   Update On 2018-02-01 20:44 GMT
மும்பையில் ஆன்லைனில் ஐபோன்-8 ஆர்டர் செய்த நபருக்கு சோப்பு அனுப்பிய பிளிப்கார்ட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Flipkart #SoapforIPhone8
மும்பை:

பிளிப்கார்ட் (Flipkart) பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு இணையவழியாக பொருட்கள் விற்பனை செய்யும் வலைத்தளமாகும். இந்தியாவின் இணையவழி பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் இதுவே மிகப்பெரியதாகும்

இந்நிலையில், மும்பையை சேர்ந்த ஒருவர் பிளிப்கார்ட்டில் ஐபோன்-8 ஒன்றை ஆர்டர் செய்து அதற்காக ரூ.55 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார். அவருக்கு கடந்த மாதம் 22-ம் தேதி பிளிப்கார்ட்டில் இருந்து ஒரு பார்சல் வந்தது. கையெழுத்து போட்டு பார்சலை பிரித்த அந்த நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பார்சலில் ஐபோன்-8க்கு பதிலாக வெறும் ரூ.10 மதிப்புள்ள டிடர்ஜெண்ட் சோப்பு மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பிளிப்கார்ட் நிறுவனம் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த பிளிப்கார்ட் நிறுவனம், இந்த தவறு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும், பாதிக்கப்பட்ட நபருக்கு கண்டிப்பாக உரிய பொருள் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. #Flipkart #SoapforIPhone8 #BookedforCheating #tamilnews
Tags:    

Similar News