செய்திகள்

தனிநபர் கடன் வாங்குவோரில் தமிழகத்துக்கு 2-வது இடம் - ரிசர்வ் வங்கி அறிக்கையில் தகவல்

Published On 2018-05-10 08:22 GMT   |   Update On 2018-05-10 08:22 GMT
2017-18ம் நிதியாண்டில் அதிக அளவில் தனிநபர் கடன்கள் வாங்கியதில் தென் மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RBI
மும்பை:

2017-18ம் நிதியாண்டில் அதிக அளவில் தனிநபர் கடன்கள் வாங்கியதில் தென் மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்தியாவை பொறுத்த வரையில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. இந்த மாநிலத்தில் ரூ.1.6 லட்சம் கோடிக்கு தனிநபர் கடன் வாங்கப்பட்டுள்ளது.

ரூ.1.5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. கேரளா ரூ.91,000 கோடியும், தெலுங்கானா ரூ.90,200 கோடியும், ஆந்திரா ரூ.72,100 கோடியும் கடன் வாங்கியுள்ளன.

தென் மாநிலங்கள் வாங்கிய மொத்த கடன் ரூ.5.7 லட்சம் கோடியாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18 நிதியாண்டில் தென்னிந்தியாவின் தனிப்பட்ட கடன் மதிப்பு 37 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. வட மாநிலங்களின் தனிப்பட்ட கடன் மதிப்பு 21 சதவீதம் ஆகும். மேற்கு மாநிலங்களின் கடன் மதிப்பு 14 சதவீதமாக உயர்வைக் கண்டுள்ளது.

தனியார் கடன் நிறுவனங்களில் குறிப்பாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் ஊடுருவல் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. #RBI #ReserveBank
Tags:    

Similar News