செய்திகள்

காலா பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு - கர்நாடக முதல்-மந்திரி பேட்டி

Published On 2018-06-06 19:23 GMT   |   Update On 2018-06-06 19:23 GMT
கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்று ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kaala #Kumarasami
பெங்களூரு:

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. நடிகை ஜெயமாலா உள்பட 25 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை இங்கு வெளியிடாமல் இருந்தால் நல்லது என்று விநியோகஸ்தர்களுக்கு நான் கூறினேன். இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.

ஆயினும் கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவோம். ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் இன்று (அதாவது நேற்று) இரவோ அல்லது இன்று(வியாழக்கிழமை) காலையிலோ ஒதுக்கப்படும். அதன் பிறகு புதிய மந்திரிகள் தங்களின் பணிகளை தொடங்குவார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #Kaala #Kumarasami 
Tags:    

Similar News