செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் ஒருசில பகுதியை மட்டும் ஏற்க மறுப்பதா? கவர்னருக்கு கெஜ்ரிவால் மீண்டும் கடிதம்
டெல்லியில் மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் ஒரு சில அம்சங்களை மட்டும் ஏற்க மறுப்பது குறித்து கவர்னருக்கு கெஜ்ரிவால் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளார். #ArvindKejriwal
புதுடெல்லி:
டெல்லியில் மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பிரிவு கடந்த வாரம் தீர்ப்பு கூறியது.
அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கே அதிக அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது.
இது சம்பந்தமாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று கவர்னர் செயல்பட வேண்டும் என்று கூறி இருந்தார்.
மேலும் டெல்லி மாநில அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் கொண்ட சேவை துறை அதிகாரங்களை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதற்கு பதில் அளித்து கவர்னர் அனில்பைஜால் முதல்-மந்திரி கெஜ்ரி வாலுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதைத்தொடர்ந்து இப்போது கெஜ்ரிவால் மீண்டும் கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் முழு அம்சங்களையும் கவர்னர் அமல்படுத்த வேண்டும். ஆனால், தீர்ப்பில் ஒரு சில அம்சங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு விட்டு சில பகுதிகளை ஏற்க மறுப்பது சரியல்ல.
ஒரே தீர்ப்பில் ஒரு பத்தியில் உள்ள அம்சங்களை மட்டும் ஏற்று கொள்கிறீர்கள். அதே பத்தியில் உள்ள மற்றொரு அம்சத்தை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?
அதிகாரிகள் மாற்றம் தொடர்பான சேவைதுறை அதிகாரங்கள் அமைச்சரவைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் தீர்ப்பின் முக்கிய அம்சமாகும். அதை எப்படி ஏற்க மறுக்கலாம்?
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி இருந்தார்.
இந்த கடிதம் தொடர்பாக கவர்னர் அனில்பைஜால் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், சேவை அதிகாரம் தொடர்பான அப்பீல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில், தீர்வு வருவதற்கு முன்பாக முதல்-மந்திரி தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார்.
மேலும் நான் எழுதிய கடிதத்தில் சில பகுதிகளை மட்டுமே குறிப்பிட்டு தனக்கு சாதகமான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு குறை கூறுகிறார் என்று கூறினார்.
டெல்லியில் ஒவ்வொரு தொகுதியிலும் 1100 பேரை அரசே புனித ஸ்தலங்களுக்கு அழைத்து செல்லும் திட் டத்தை கெஜ்ரிவால் கொண்டு வந்தார். ஆனால், கவர்னர் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காததால் கிடப்பில் கிடந்தது.
இப்போது சுப்ரீம் கோர்ட்டு அமைச்சரவைக்குதான் அதிகாரம் என்று தீர்ப்பு கூறியதால் நேற்று இந்த திட்டத்தை முதல்-மந்திரி கெஜ்ரிவால் அமலுக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ArvindKejriwal

உங்களுக்கு தீர்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சுப்ரீம் கோர்ட்டை அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள். மாநில அதிகாரம் தொடர்பான விவகாரங்களில் மத்திய உள்துறை தலையிடக்கூடாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.