செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை தூக்கிச் சென்று பிரசவத்துக்கு உதவிய போலீஸ் அதிகாரி

Published On 2018-09-15 11:15 GMT   |   Update On 2018-09-15 11:15 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தவரை ஒரு போலீஸ் அதிகாரி தனது தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #HathrasPoliceman #pregnantwoman
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா நகருக்கு உட்பட்ட ஹத்ராஸ் நகரில் சாலையோரத்தில் நேற்று ஒரு பெண் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார். அவருக்கு உதவுமாறு வழிப்போக்கர்களிடம் அந்த பெண்ணின் கணவர் கெஞ்சி கொண்டிருப்பதை கண்ட ஹத்ராஸ் காவல் நிலைய போலீஸ் உயரதிகாரி உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை அங்கு அழைக்க முயற்சித்தார்.

வாகனம் ஏதும் கிடைக்காத நிலையில் அந்தப் பெண்ணின் வேதனை குரல் அதிகரிக்க தொடங்கியது.
இதையடுத்து, அந்தப் பெண்ணை தனது தோளில் சுமந்து சென்று அருகாமையில் உள்ள பிரசவ மருத்துவமனையில் அனுமதித்தார்.


தகுந்த நேரத்தில் அவர் செய்த உதவியால் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்து அழகான குழந்தையை ஈன்றெடுத்தார். #HathrasPoliceman #pregnantwoman 
Tags:    

Similar News