செய்திகள்

சீதாதேவி பூமிக்குள் ஐக்கியமான புனிததலத்தில் பிரியங்கா வழிபாடு

Published On 2019-03-19 09:59 GMT   |   Update On 2019-03-19 09:59 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் படகு மூலம் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்துவரும் பிரியங்கா காந்தி சீதாதேவி பூமிக்குள் ஐக்கியமான புனிததலத்தில் இன்று வழிபாடு செய்தார். #PriyankaGandhi #SitaSamahitSthal #Gangayatra
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அலகாபாத்துக்கும் வாரணாசிக்கும் இடையேயுள்ள சீதாமர்கி என்னுமிடத்தில் சீதைக்கான கோயில் அமைந்துள்ளது.

ராமரின் வனவாச காலத்தின் பின்னர் இங்குள்ள காட்டுப்பகுதியில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதாதேவியுடன் அவர்களது மகன்களான லவன், குசன் வளரும்போது, இராமர் அனுப்பிய அசுவமேத யாகக் குதிரை சீதாமர்கி வந்தது.

அந்த குதிரை இராமருக்குரியது என்பது தெரியாமல் லவன், குசன் அதனைக் கட்டிவைத்ததாகவும், அதனை விடுவிக்க ராமர் வந்ததாகவும், அப்போது இராமருக்கும் லவன், குசன் ஆகியோருக்கும் இடையே சண்டை நடந்ததாகவும், அப்போது சீதை வெளியே வந்து இராமரிடம் பிள்ளைகளைப் பற்றிக் கூறிவிட்டு, அவர்களை ராமரிடம் ஒப்படைத்துவிட்டு பூமிக்குள் சென்றதாகவும் புராணங்களில் காணப்படுகிறது.

தற்போது படோஹி மாவட்டத்தில் உள்ள இந்த இடம் சீதா சமஹிட் ஸ்தல் அல்லது சீதாமடி என்றும் அழைக்கப்படுகிறது.



இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் படகு மூலம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்துவரும் உத்தரப்பிரதேசம் கிழக்கு மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சீதாதேவி பூமிக்குள் ஐக்கியமான இந்த புனிததலத்தில் இன்று வழிபாடு செய்தார். #PriyankaGandhi #SitaSamahitSthal  #Gangayatra
Tags:    

Similar News