செய்திகள்
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள்

பெண்கள் இனி டிக்கெட் எடுக்க வேண்டாம்- டெல்லி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

Published On 2019-10-29 06:07 GMT   |   Update On 2019-10-29 06:07 GMT
டெல்லியில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் அக்டோபர் 29-ம் தேதி முதல் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார். இதன்படி,  பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது. 

பெண்கள் டிக்கெட் வாங்காமல் இலவசமாக பேருந்துகளில் இன்று தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். டெல்லி அரசின் இந்த திட்டத்திற்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

டெல்லியைச் சேர்ந்த சுவேதா என்ற பெண் பயணி ஒருவர் இது பற்றி கூறுகையில், “ இது சிறப்பான நடவடிக்கை. டிக்கெட் வாங்க முடியாதவர்கள் இனி பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய முடியும்” என்றார். 
Tags:    

Similar News