செய்திகள்
பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 3100 கோடி ஒதுக்கீடு

பிரதமர் நிவாரண நிதியில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ. 3100 கோடி ஒதுக்கீடு

Published On 2020-05-13 15:51 GMT   |   Update On 2020-05-13 17:56 GMT
பிரதமர் நிவாரண நிதியில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 3100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்டும் வகையில் பிரதமர் கேர்ஸ் பண்ட் (PM CARES Fund) என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. தொழில் அதிபர்கள், நிறுவனங்கள், அரசு ஊழியர்கள். பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், பொது மக்கள் தங்களால் இயன்ற நிதிகளை வழங்கினர்.

தற்போது அந்த நிதியில் இருந்து 3100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதில் 2000 கோடி ரூபாய்க்கு வென்டிலேட்டர்ஸ் வாங்கப்படும் என்றும், 1000 கோடி ரூபாய் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும், 100 கோடி ரூபாய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு திட்டத்திற்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News