செய்திகள்
பிரதமர் மோடி

வேளாண் துறையில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2020-10-03 11:41 GMT   |   Update On 2020-10-03 11:41 GMT
வேளாண் துறையில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இமாச்சல பிரதேச மாநிலம் ரோதங்கில், உலகின் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சோலங்கி பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘பொதுமக்கள் நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை குறைப்பதற்காகவும், அதிக அளவிலான சேவைகளை பெறுவதற்காகவும் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பணியாற்றி வந்தவர்களுக்கு நாங்கள் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்தங்கள் தொல்லைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றத்தை கொண்டுவர நாடு உறுதி பூண்டு உள்ளதாகவும் அதற்காகவே வேளாண்துறையில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் முன்னாள் தேர்தல் இருப்பதாகவும், ஆனால், விவசாயிகளுடைய பிரகாசமான எதிர்காலம்தான் தங்களுக்கு முன்னால் நிற்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Tags:    

Similar News