செய்திகள்
யோகி ஆதித்யநாத்

உத்திர பிரதேச அரசாங்கத்தை உலக சுகாதார மையம் பாராட்டியதாக வைரலாகும் தகவல்

Published On 2021-05-20 05:28 GMT   |   Update On 2021-05-20 05:28 GMT
கொரோனா தொற்று கண்கானிப்பு பணிகளில் உத்திர பிரதேச அரசுக்கு உலக சுகாதார மையம் ஒத்துழைப்பு வழங்குகிறது.


கொரோனா பரிசோதனை செய்வதில் உத்திர பிரதேச மாநிலம் கையாண்ட திட்டத்தை உலக சுகாதார மையம் பாராட்டியதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளுடன் செய்தி குறிப்பு ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றை சரி செய்ய வீடு வீடாக சென்று கொரோனா சோதனை செய்யும் அம்மாநில அரசின் திட்டத்தை உலக சுகாதார மையம் பாராட்டியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 



வைரலாகும் செய்தி குறிப்பில், உலக சுகாதா மையத்தின் செய்தி தொடர்பாளர் சோதனை செய்து கண்கானிப்பது நாடு முழுக்க உலக சுகாதார மையம் பின்பற்றி வரும் முக்கிய நடவடிக்கைகள் என தெரிவித்து இருக்கிறார். மேலும் உலக சுகாதார மையம் உத்திர பிரதேச மாநிலத்தில் தொற்றாளர்களை கண்டறிய உதவியதாக தெரிவித்து இருக்கிறது. 

இந்த நடவடிக்கையே தவறான தலைப்புகளில் செய்திகளாக வெளியாகி இருந்தது. அந்த வகையில் உத்திர பிரதேச மாநில அரசாங்கத்தை உலக சுகாதார மையம் பாராட்டவில்லை என தெரிகிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News