செய்திகள்
கோப்புப் படம்

ஊரடங்கு தளர்வுகளால் கடந்த மாதத்தை விட பாஸ்டேக் வசூல் அதிகரிப்பு

Published On 2021-07-01 19:14 GMT   |   Update On 2021-07-01 19:14 GMT
ஜூன் மாதம் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வாயிலாக வசூலான தொகை கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களை விட குறைவாகவே உள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புகள் குறைந்து காணப்படுகின்றன. கொரோனா தாக்கம் குறைந்து வரும் சூழலில் பல மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. 

நாட்டில் சுங்கச்சாவடி கட்டண வசூலில் 95 சதவீதம் பாஸ்டேக் வாயிலாகவே வசூலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து பாஸ்டேக் கட்டாயம் என அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வாயிலான வசூலானது கடந்த ஜூன் மாதத்தில் அதற்கு முந்தைய மே மாதத்தை விட 21 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் வசூல் 2,576 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

வசூல் தொகையானது கடந்த மே மாதத்தை விட அதிகமாக இருந்தாலும், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களை விட குறைவாகவே உள்ளது.

பாஸ்டேக் பரிவர்த்தனையும் கடந்த மே மாதத்தில் 11.65 கோடியாக இருந்தது. இது கடந்த ஜூனில் 15.79 கோடியாக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News