செய்திகள்
ரேபதி மோகன் தாஸ்

திரிபுரா சபாநாயகர் ரேபதி மோகன் தாஸ் ராஜினாமா

Published On 2021-09-02 15:51 GMT   |   Update On 2021-09-02 15:51 GMT
திரிபுராவில் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த ரேபதி மோகன் தாஸ், மாநில பாஜக துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அகர்தலா:

திரிபுரா மாநில பாஜகவின் மூத்த தலைவரும், சட்டசபை சபாநாயகருமான ரேபதி மோகன் தாஸ் (வயது 70) தனிப்பட்ட காரணங்களுக்காக சபாநாயகர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் பிஸ்வபந்து சென்னிடம் கொடுத்தார். கட்சிப் பணிகளுக்காக கூடுதல் நேரம் செலவிட்டு தீவிரமாக செயல்பட விரும்புவதாகவும், சபாநாயகர் பதவி தனக்கு கடினமாக இருப்பதாகவும் தாஸ் தெரிவித்தார். அதன்பின்னர், அவர் மாநில பாஜக துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுபற்றி ரேபதி மோகன் தாஸ் கூறுகையில், “இந்த பதவியில் இருந்து என்னை விடுவிக்கும்படி நீண்ட காலமாக முதல்வலிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். தொடர்ந்து வலியுறுத்தியதால், பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டேன். அதற்காக நான் பாஜக கட்சி மற்றும் முதல்வர் பிப்லப் தேப்-க்கு நன்றி தெரிவிக்கிறேன். அதேசமயம், எம்எல்ஏ பதவியில் இருந்தோ அல்லது கட்சியில் இருந்தோ விலகவில்லை” என்றார்.
Tags:    

Similar News