இந்தியா
ஆந்திராவில் சோகம் - ஆற்றில் மூழ்கி மாணவர்கள் உள்பட 6 பேர் பலி
ஆந்திர பிரதேசத்தில் ஆற்றில் குளிக்க சென்ற 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
குண்டூர்:
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் குண்டூரில் மடிப்பாடு கிராமத்தில் 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் கிருஷ்ணா ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர் என மொத்தம் 6 பேர் தவறுதலாக ஆழ்ந்த குழிக்குள் விழுந்தனர். அவர்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதில் அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி. விஜயபாஸ்கர் ரெட்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிக்க சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்...மிசோரமில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்