இந்தியா
மணிப்பூரில் பாஜகவுக்கு ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
மணிப்பூர் மக்களின் நலன் கருதி, ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 32 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில், பாஜகவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
மணிப்பூர் மக்களின் நலன் கருதி, ஆட்சியமைப்பதற்கு பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்எல்ஏக்களும் குமுக்சம் ஜாய்கிசன் சிங்கை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.