இந்தியா
ரெயில்வே டிக்கெட் மோசடி நிறுத்தப்பட வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
- நாட்டின் உள்கட்டமைப்புகளில் ரெயில்வே முக்கியமானது.
புதுடெல்லி:
ரெயில்வே இணையதளத்தில் போலி அடையாள எண்களை உருவாக்கி, டிக்கெட் எடுத்து விற்றதாக 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
அதை விசாரித்த நீதிபதிகள் திபங்கர் தத்தா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ''நாட்டின் உள்கட்டமைப்புகளில் ரெயில்வே முக்கியமானது. ஆண்டுதோறும் 673 கோடி பயணிகளை ஏற்றிச் செல்கிறது. அதன் டிக்கெட் வழங்கும் முறையில் முறைகேடு செய்வது நிறுத்தப்படவேண்டும்'' என்று கூறினர்.