இந்தியா
துப்பாக்கியை சுத்தம் செய்தபோது விபரீதம்- குண்டு பாய்ந்து ஆம் ஆத்மி எம்எல்ஏ உயிரிழப்பு
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குர்பிரீத் பாசி கோகி கை தவறுதலாக பட்டதில் ஏற்பட்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ குர்பிரீத் பாசி கோகி, தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது, தவறுதலாக சுடப்பட்டதில் காயமடைந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குர்பிரீத் பாசி கோகி உடல் டி.எம்.சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு தான் மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.