இந்தியா

VIDEO: சுற்றுலா பயணிகளிடம் சிறுவனின் பாசம்

Published On 2025-01-11 08:04 IST   |   Update On 2025-01-11 08:04:00 IST
  • சிறுவனின் செயலை வீடியோ எடுத்த அவர்கள் அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.
  • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுவனின் அன்பான செயலை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அங்குள்ள மலைகள், காடுகள் போன்ற இயற்கை சூழலை காண சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். ஜூலுக் நகருக்கு சுற்றுலா பயணிகள் சிலர் சென்றிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சிறுவன் தனது தம்பியின் கையை பிடித்துக்கொண்டு சென்றான். சுற்றுலா பயணிகளை பார்த்த அந்த சிறுவன் அவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என தனது மழலைக்குரலில் கேட்டான். அதற்கு அவர்கள் ஐதராபாத்தில் இருந்து வருவதாக கூறினர்.

இதனையடுத்து வாலிபர்கள் அந்த சிறுவனிடம் ஊரை கேட்டனர். அதற்கு தான் இதே பகுதியைச் சேர்ந்தவன்தான் என கூறிவிட்டுச் சென்றான். சிறிதுதூரம் நடந்து சென்ற அவன் உங்களுக்கு மிட்டாய் வேண்டுமா? என கேட்டான். அப்போது அவர்களின் பதிலுக்காக காத்திராமல் தனது கையில் இருந்த இனிப்புகளை அவர்களுக்கு வழங்கி விட்டு பின்னர் தனது தம்பியுடன் சென்றான். சிறுவனின் இந்த செயலை வீடியோ எடுத்த அவர்கள் அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுவனின் அன்பான செயலை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Tags:    

Similar News