இந்தியா

ஜெர்மனி குடியுரிமை வைத்துக் கொண்டு மூன்று முறை எம்.எல்.ஏ.வான கே.சி.ஆர். கட்சி முன்னாள் தலைவர்

Published On 2024-12-09 10:14 GMT   |   Update On 2024-12-09 10:14 GMT
  • சந்திரசேகர ராவ் கட்சியின் முன்னாள் தலைவர் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
  • ஜெர்மனி குடியுரிமை பெற்றிருந்த நிலையில் அதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேக ராவ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் ஜெர்மனி நாட்டின் குடியுரிமையை வைத்துக் கொண்டு மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார் என தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்தள்ளார்.

2009-ம் ஆண்டு வெமுலாவாடா தொகுதியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரமேஷ். 2010-ல் சந்திரசேகர ராவ் கட்சிக்கு தாவினார். தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகி 2010 முதல் 2018 வரை இடைத்தேர்தல் உள்பட மூன்று முறை சந்திரசேகர ராவ் கட்சி எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜெர்மனி குடியுரிமை பெற்றிருந்த அவர், அதை மறைத்து தன்னை இந்திய குடிமகன் என மோசடியான ஆவணங்களை வைத்து வெமுலாவாடா தொகுதியில் போட்டியிட்டுள்ளார் என உயர்நீதிமன்றம் தேர்வித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஆதி ஸ்ரீனிவாஸ் ரமேஷ்க்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜெர்மனி தூதரகத்தில் இருந்து, அவர் ஜெர்மனி குடியுரிமை பெறவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்பிக்க தவறிவிட்டார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 25 லட்சம் ரூபாயை ஆதி ஸ்ரீனிவாஸ்க்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023-ல் ஸ்ரீனிவாஸிடம் ரமேஷ் தோல்வியடைந்தார். பொய் சான்றிதழ் வழங்கி தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரமேஷ்க்கு நீதிமன்றம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது, அவருக்கு பின்னடைவு என ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய சட்டப்படி இந்திய குடியுரிமை பெறாத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. வாக்களிக்கவும் முடியாது.

ரமேஷ் 2023-ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் ஜெர்மனி பாஸ்போர்ட்டை வைத்திருப்பதாகவும், அவர் தனது விண்ணப்பத்தில் உண்மைகளை மறைத்ததன் காரணமாக அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் 2020-ம் ஆண்டில் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இதே காரத்திற்காக 2013-ல் இடைத்தேர்தல் வெற்றியை ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

Similar News