இந்தியா
ஹோலி கொண்டாடிய சிறுவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி.. தானேவில் சோகம்
- நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.
நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 15-16 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.
திடீரென நீர் மட்டம் உயர்ந்தபோது அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சாம்டோலியில் உள்ள போடார் குரு வளாகத்தில் வசிக்கும் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), மற்றும் ஆர்யன் சிங் (16) என்று அடையாளம் காணப்பட்டனர்.
நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.