இந்தியா
ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணுக்கு வைரஸ் காய்ச்சல்
- மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பவன் கல்யாண் கலந்து கொள்ள மாட்டார்.
- தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
திருப்பதி:
ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கடந்த மாதம் முழுவதும் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து வந்தார்.
இந்த நிலையில் பவன் கல்யாணுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பவன் கல்யாண் சிறிது நாட்கள் ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி இன்று நடக்கும் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பவன் கல்யாண் கலந்து கொள்ள மாட்டார் என அவரது அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.