இந்தியா

இந்தியர்களுக்கு கை விலங்கு?- பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்

Published On 2025-02-06 12:21 IST   |   Update On 2025-02-06 12:22:00 IST
  • எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
  • பிரதமர் மோடியிடம் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக நேற்று 104 இந்தியர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது அவர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டு இருந்தது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்புப் படை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் எதிரொலித்தது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, இந்தியர்களுக்கு கை விலங்கு என்ற புகாரை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுத்துள்ளது.

இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News