திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்வதாக தீர்ப்பில் அறிவித்தார்.
- அரியானா சட்டசபை தேர்தலையொட்டி கெஜ்ரிவால், வெளியே வந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.
சுப்ரீம் கோர்ட்டு வலைதளத்தில் செப்டம்பர் 13-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி சூரியகாந்த் தீர்ப்பை வெளியிட்டார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்வதாக அவர் தீர்ப்பில் அறிவித்தார்.
அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
ஜாமின் உத்தரவை தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொட்டும் மழையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் வரவேற்றனர்.
அரியானா சட்டசபை தேர்தலையொட்டி கெஜ்ரிவால், வெளியே வந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.