இந்தியா
விண்வெளி நிலையத்தில் யோகாசனம் செய்த வீரர்
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார்.
- உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மத்திய, மாநில மந்திரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான படத்தை அவர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சர்வதேச யோகா தினமான இன்று விண்வெளி நிலையத்தில் யோகா பயிற்சி செய்து வருகிறேன். யோகா உடலை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனதையும் கூர்மைபடுத்துகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது. உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.