உலகம் ஆயுர்வேதத்தை நோக்கி திரும்புகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
- யோகா, ஆயுர்வேதம் உலகிற்கு புதிய நம்பிக்கை,
- 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்தை பாரம்பரிய மருத்துவமுறையாக அங்கீகரித்துள்ளன.
புதுடெல்லி:
கோவாவின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காஜியாபாத் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் டெல்லியில் உள்ள பனாஜியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகிய 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
அதன் பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- ஆயுர்வேதம் என்பது சிகிச்சை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. யோகா & ஆயுர்வேதம் உலகிற்கு புதிய நம்பிக்கை. ஆயுர்வேதத்தின் முடிவும் விளைவும் எங்களிடம் இருந்தது, ஆனால் சான்றுகளின் அடிப்படையில் நாங்கள் பின்தங்கியிருந்தோம். எனவே, இன்று நாம் 'தரவு அடிப்படையிலான ஆதாரங்களை' ஆவணப்படுத்த வேண்டும்.
இந்த 3 நிறுவனங்கள் ஆயுஷ் சுகாதார அமைப்புக்கு வேகம் கொடுக்கும். 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்தை பாரம்பரிய மருத்துவ முறையாக அங்கீகரித்துள்ளன. மற்ற நாடுகளிலும் ஆயுர்வேதத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஆயுர்வேதம் சரியான வாழ்க்கை முறையை நமக்குக் கற்பிக்கிறது.
நமது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை எப்படிப் பேணுவது என்பதற்கான வழிகாட்டி ஆயுர்வேதம் தான். 'ஒரே பூமிக்கு ஒரே ஆரோக்கியம்' என்ற எதிர்காலக் கண்ணோட்டத்தை உலகிற்கு முன் வைத்துள்ளோம். இதன் பொருள் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய பார்வை இவ்வாறு அவர் கூறினார்.