இந்தியா

இசட் பிளஸ் பாதுகாப்பில் தூங்கும் குட்டி யானைகள்- வீடியோ வைரல்

Published On 2024-06-19 08:42 IST   |   Update On 2024-06-19 08:42:00 IST
  • தூங்கும் யானைக் குட்டிகளைச் சுற்றி பெரிய யானைகள் நெருக்கமாக நின்று பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியபடி நிற்கும் காட்சிகள் பார்வையாளர்களின் மனம் மயக்குகிறது.
  • வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

யானை கூட்டத்தின் அபூர்வ வாழ்க்கை காட்சி ஒன்று கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது. யானை கூட்டம் ஒன்றில் உள்ள குட்டி யானைகள், பெரிய யானைகளின் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் தூங்கி ஓய்வெடுக்கும் காட்சிகள் வான்வெளியில் பறந்தபடி படம்பிடிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள போனாய் வனப்பகுதியில் இந்த காட்சி படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. தூங்கும் யானைக் குட்டிகளைச் சுற்றி பெரிய யானைகள் நெருக்கமாக நின்று பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியபடி நிற்கும் காட்சிகள் பார்வையாளர்களின் மனம் மயக்குகிறது.

இந்திய வன சேவை அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இந்த காட்சிகளை பகிர்ந்தார். "இசட் பிளஸ் பாதுகாப்புடன் குட்டி தூங்கச் செல்கிறார்" என்று அவர் தலைப்பிட்டு இதை வெளியிட்டார். இதை ஏராளமானவர்கள் ரசித்து பகிர்ந்துள்ளனர்.

Tags:    

Similar News