null
ஐஸ்கிரீம்-சானிட்டரி நாப்கின் காம்போ... பாராட்டிய வாடிக்கையாளர்... வருத்தம் தெரிவித்த பிக்பாஸ்கெட்
- இவரது பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன் சரியாகப் படிக்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டனர்.
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வருத்தத்தை தரும் சம்பவங்கள் தொடர்பாக இன்றைய சமூக வலைத்தளங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகிறது. அதனால் சில நிறுவனங்கள் மன்னிப்பு கோரும் சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் இதில் சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பாராட்டுகளையும் பெறுகின்றன.
ஆனால் இப்போது நடைபெற்றுள்ள சம்பவம் வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை பெற்றுள்ளது. இதுதொடர்பாக அமிர்தா முருகேசன் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் ஐஸ்கிரீம் காம்போ தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து சரியாக செய்துள்ளீர்கள் (சரியான காம்போ) என்று பிக்பாஸ்கெட் நிறுவனத்தை டாக் செய்து பாராட்டும் விதமாக பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவை சரியாக கவனிக்காத பிக்பாஸ்கெட் நிறுவனம், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். DM மூலம் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொடர்பு எண்ணுடன் எங்களுக்கு உதவ முடியுமா? இந்த சிக்கலை தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என கூறியுள்ளது.
இந்த பதிவுகளை இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பார்த்துள்ளனர். பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் பலர் நகைச்சுவையாக பதிவிட்டாலும், ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன் சரியாகப் படிக்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.