இந்தியா

மத்திய மந்திரி சுரேஷ்கோபி வீட்டில் திருட்டு: மர்மநபர்கள் கைவரிசை

Published On 2024-12-11 04:44 GMT   |   Update On 2024-12-11 04:44 GMT
  • சுரேஷ் கோபியின் குடும்ப வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
  • திருட்டு போன பொருட்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி. இவர் கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதன் மூலம் கேரளாவின் முதல் பா.ஜ.க. எம்.பி. ஆனார். இதையடுத்து அவருக்கு மத்திய மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அவர் மத்திய பெட்ரோலிய-இயற்கை எரிவாயு துறை மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் கொல் லத்தில் உள்ள மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் குடும்ப வீட்டில் திருட்டு நடந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து பொருட்களை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கொல்லம் இரவிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மத்திய மந்திரி சுரேஷ் கோபி வீட்டில் திருட்டு போன பொருட்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

Tags:    

Similar News