சினிமா செய்திகள்
null

மோடி குறித்து சந்திரபாபு நாயுடு சொன்ன அந்த கருத்து.. பாயின்ட்டை பிடித்த பிரகாஷ் ராஜ்

Published On 2024-06-05 15:01 GMT   |   Update On 2024-06-05 15:02 GMT
  • சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு, தனது எக்ஸ் பக்கத்தில் கருது ஒன்றை கூறியிருந்தார்
  • தற்போதைய அரசியல் சூழலில் இந்த ட்வீட் மீண்டும் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பாராளும்னற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆர்.ஜே.டி கட்சித் தலைவரும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமாரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திராவின் அடுத்த முதலைவராக பதவியேற்க உள்ளவருமான சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் இந்த தேர்தலில் கிங் மேக்கர்களாக விளங்குகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் 16 சீட்களும், ஆர்.ஜே.டி 12 சீட்கள் வென்றுள்ளது. இந்த இரண்டு கட்சியும் இந்தியா கூட்டணி பக்கம் சாயும் பட்சத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

ஆனால் இன்று நடந்த என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற சந்திர பாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் மோடி பிரதமராக முழு ஆதரவு வழங்கியுள்ளனர். இந்நிலையில், மாநில உரிமைகளுக்காக அதிகம் போராடியவரும், அதில் எந்த சமரசமும் செய்யாதவறாக பார்க்கப்பட சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு, தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவின் இறையாண்மை மிக்க அரசு கட்டமைப்பை மோடி திட்டமிட்டு அழித்து வருகிறார்.

பாஜக ஆட்சியில், சுதந்திரமும் மற்றும் ஜனநாயகமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. விசாரணை அமைப்பான சிபிஐ முதல் ரிசர்வ் வங்கி வரை, அரசியலமைப்பின் உயரிய கட்டமைப்பான தேர்தல் ஆணையத்தைக் கூட மோடி விட்டுவைக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

தற்போதைய அரசியல் சூழலில் இந்த ட்வீட் மீண்டும் வைரலாகி வருகிறது. நடிகர் பிரகாஷ்ராஜ்  சந்திரபாபு நாயுடுவின் டீவீட்டைப் பகிர்ந்து இந்த கருத்து முற்றிலும் உண்மை என்று நகைமுரணாக பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News