சாம்பியன்ஸ் டிராபிக்கு கோகோ கோலா வெளியிட்ட விளம்பரம்.. சம்பவம் செய்த பெப்சி!
- 'HALF TIME' என்ற வாசகத்துடன் கோகோ கோலா விளம்பரம் செய்து வருகிறது.
- மீண்டும் தொடங்கிய இந்த விளம்பர யுத்தம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
பிரபல குளிர்பானங்களான பெப்சி மற்றும் கோகோ கோலா இடையே பல தசாப்தங்களாக போட்டி நிலவி வருகிறது. விளம்பரங்கள் மூலம் இரு நிறுவனங்களும் முந்தைய காலங்களில் மோதிக்கொண்டன.
இரு நிறுவனங்களின் மோதலை பலரும் ஆர்வத்துடன் கவனித்து வருவர். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருவதை ஒட்டி மீண்டும் பெப்சி மற்றும் கோகோ கோலா விளம்பர போரை தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை முன்னிட்டு 'HALF TIME' என்ற வாசகத்துடன் கோகோ கோலா விளம்பரம் செய்து வருகிறது.
அதாவது இடைவேளைகளில் கோகோ கோலா அருந்துங்கள் என்பதே அதன் அர்த்தம். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளம்பரம் வெளியிட்டுள்ள பெப்சி, 'Anytime is Pepsi Time' என்ற விளம்பர யுக்தியை முன்னெடுத்துள்ளது.
அதாவது இடைவேளை வரை எதற்கு காத்திருக்கிறீர்கள், எந்த நேரமும் பெப்சி குடிக்கும் நேரம்தான் என்று இந்த விளம்பரம் உணர்த்துகிறது. மீண்டும் தொடங்கிய இந்த விளம்பர யுத்தம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.