இந்தியா

வரதட்சணை கொடுமை- தெலுங்கானாவில் இளம்பெண் தற்கொலை

Published On 2025-03-05 10:36 IST   |   Update On 2025-03-05 10:36:00 IST
  • தேவிகா - சரத் சந்திராவிற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவாவில் திருமணம் நடந்துள்ளது.
  • இந்த சம்பவம் தொடர்பாக தேவிகாவின் கணவர் சரத் சந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானாவில் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரியும் இளம்பெண் (25) வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஐதரபாத்தில் நடந்தது.

தேவிகா - சரத் சந்திராவிற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவாவில் திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ராய்துர்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் தேவிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேவிகா தற்கொலை செய்துகொண்டதையடுத்து, சரத் சந்திரா போலீசாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தார்.

கூடுதல் வரதட்சணைக்காக தேவிகா பலமுறை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து தேவிகாவின் தாய் ராமலட்சுமி, அவரது மருமகன் மகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில், ராய்துர்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் சரத் சந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேவிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News