இந்தியா

சத்தீஸ்கரில் வினோதம்: வெற்றி பெற்ற மனைவிகளுக்கு பதில் பதவியேற்ற கணவர்கள்

Published On 2025-03-04 20:39 IST   |   Update On 2025-03-04 20:39:00 IST
  • சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
  • அங்கு மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதைத்

தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.

இங்கு மொத்தமுள்ள 49 நகராட்சி கவுன்சில் தலைவர் பதவிகளில் 35 இடங்களில் பா.ஜ.க.வும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வென்றது. 114 நகர பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. 81 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் வென்றது. நகராட்சி வார்டுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது.

இதற்கிடையே, சத்தீஸ்கரின் பரஸ்வாரா கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். இதில் தேர்வான 6 பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றது குறித்து விசாரணை நடத்துப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News