இந்தியா
VIDEO: உ.பி. சட்டமன்றத்தில் பான் மசாலா மென்று எச்சில் துப்பிய எம்.எல்.ஏ.க்கள்
- உத்தரபிரதேச சட்டமனறத்தில் இருந்த எச்சில் கறைகளை கண்டு சபாநாயகர் அதிர்ச்சியடைந்தார்.
- எச்சில் கறைகளை சுத்தம் செய்யவேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார்.
உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் பான் மசாலாவை மென்று எச்சில் துப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் நுழைந்த சபாநாயகர் சதீஷ் மஹானா, எச்சில் கறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து,
எச்சில் கறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதை எம்.எல்.ஏ.க்கள் தடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் சதீஷ் மஹானா அறிவுறுத்தினார்.
மேலும், இந்த செயலை செய்த எம்.எல்.ஏ. தாமாக முன் வந்து செயலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.
2017 ஆம் ஆண்டு பணியின்போது அதிகாரிகள் பான் மசாலா போன்ற பொருட்களை மெல்லக் கூடாது என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.