இந்தியா

டொனால்டு டிரம்பை விட அதிக பாதுகாப்புடன் சுற்றும் கெஜ்ரிவால்.. ஸ்வாதி மலிவால் அட்டாக்

Published On 2025-03-05 16:09 IST   |   Update On 2025-03-05 16:09:00 IST
  • தம்ம தாம விபாசனா தியான மையத்தில் கெஜ்ரிவால் தனது மனைவியுடன் 10 நாட்கள் தங்குகிறார்.
  • தேர்தலில் தோற்றாலும் கெஜ்ரிவால் ஆடம்பர வாழ்க்கையை விடவில்லை என பாஜக விமர்சித்துள்ளது.

டெல்லி தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மன அமைதியை தேடி வருகிறார்.

அந்த வகையில் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள ஆனந்த்கர் கிராமத்தில் உள்ள தம்ம தாம விபாசனா தியான மையத்தில் கெஜ்ரிவால் தனது மனைவியுடன் 10 நாட்கள் தங்குகிறார்.

இந்நிலையில் நேற்று இவ்விடத்துக்கு செல்ல கான்வாய் வாகனங்கள் சூழ அரவிந்த் கெஜ்ரிவால் காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. தேர்தலில் தோற்றாலும் கெஜ்ரிவால் ஆடம்பர வாழ்க்கையை விடவில்லை என பாஜக விமர்சித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த வருடம் கெஜ்ரிவால் உதவியாளரால் அவமதிக்கப்பட்டதாகப் பரபரப்பைக் கிளப்பிய ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவால் கெஜ்ரிவாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "முழு உலகையும் விஐபி கலாச்சாரத்திற்காக விமர்சித்த கெஜ்ரிவால், இன்று டொனால்டு டிரம்பை விட பெரிய பாதுகாப்புடன் சுற்றி வருகிறார்" என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News