இந்தியா

ஆம் ஆத்மி ஆட்சியில் பல கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வீணடிக்கப்பட்டன: ரேகா குப்தா

Published On 2025-03-05 19:54 IST   |   Update On 2025-03-05 19:54:00 IST
  • டெல்லி அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன.
  • டெல்லி அரசு மருத்துவமனைகள் பலவற்றின் நிலை மோசமாக இருப்பதாக உள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க. சார்பில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா தேசிய தலைநகரில் உள்ள ஜிடிபி மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரேகா குப்தா, "டெல்லி அரசு நடத்தும் பல மருத்துவமனைகளின் கிடங்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன. தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் அப்பொருட்கள் உள்ளன. ஆம் ஆத்மி அரசு நமக்கு விட்டுச் சென்றது இதுதான்" என்று குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், "கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, இந்த மருத்துவமனை கிடங்கில் உள்ள மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இன்றும் கூட, 458 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 146 வென்டிலேட்டர்கள், 36,000 பிபிஇ கருவிகள், மல்டிபாரா மானிட்டர்கள், முகமூடிகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன.

இது ஜிடிபி மருத்துவமனையில் மட்டுமல்ல, டெல்லி முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளிலும் இதே நிலை தான் உள்ளது.

டெல்லி அரசு மருத்துவமனைகள் பலவற்றின் நிலை மோசமாக இருப்பதாகவும், உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது. "இதற்கு யார் பொறுப்பு? மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. நாங்கள் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முயற்சிப்போம்

Tags:    

Similar News