இந்தியா

கனவில் வந்து ரத்தத்தை குடிக்கும் மனைவி - தாமதமாக பணிக்கு வந்த கான்ஸ்டபிள் கொடுத்த அல்டிமேட் விளக்கம்

Published On 2025-03-05 19:56 IST   |   Update On 2025-03-05 19:56:00 IST
  • நான் வாழ்வதற்கான விருப்பத்தை இழந்துவிட்டடேன். கடவுளின் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.
  • ஆன்மீக இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தனது துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் தனது மேலதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

 உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஆயுதப்படை கான்ஸ்டபிள் (PAC) ஒருவர் பணிக்கு தாமதமாக வந்த்தற்கு கொடுத்த விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீரட்டில் பிப்ரவரி 17 அன்று பணியில் அலட்சியம் காட்டியதற்காக PAC கான்ஸ்டபிளுக்கு பட்டாலியன் பொறுப்பாளர் தல்நாயக் மதுசூதன் சர்மா ஒரு நோட்டீஸ் அனுப்பினார்.

பிப்ரவரி 16 அன்று காலை கான்ஸ்டபிள் தாமதமாக வந்ததாகவும், அடிக்கடி யூனிட் செயல்பாடுகளைத் தவறவிட்டதாகவும், இது கடுமையான ஒழுக்க மீறல் என்றும் நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நோட்டீஸுக்கு பதில் கடிதம் எழுதிய கான்ஸ்டபிள், "என் மனைவி என் மார்பில் அமர்ந்து என்னைக் கொல்லும் நோக்கத்துடன் என் இரத்தத்தைக் குடிக்க முயற்சிப்பது போல் தினமும் இரவு கனவு வருகிறது. எனவே இரவில் தூங்க முடியவில்லை"

இதனால் வேலைக்கு வர தாமதமாகிவிட்டதாக தனது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மனச்சோர்வுக்கான மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும், அவரது தாயார் நரம்பு கோளாறால் அவதிப்படுவதாகவும், இது அவரது துயரத்தை அதிகப்படுத்தியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தின் முடிவில் உணர்ச்சிவசப்பட்ட கான்ஸ்டபிள், நான் வாழ்வதற்கான விருப்பத்தை இழந்துவிட்டடேன். கடவுளின் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.

எனவே ஆன்மீக இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தனது துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் தனது மேலதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இந்தக் கடிதம் சமூக ஊடக தளங்களில் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.  

Tags:    

Similar News