விசாரணைக்கு ஆஜராகாத ராகுல் காந்தி: ரூ.200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்
- எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
- இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
லக்னோ:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலாவில் 2022, டிசம்பர் 17ல் நடந்த கூட்டத்தில் பேசியபோது வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு லக்னோ கோர்ட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்குக்காக லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.