உள்ளூர் செய்திகள் (District)

கோடை விடுமுறையையொட்டி எழும்பூர் மியூசியத்தில் அலைமோதும் கூட்டம்

Published On 2022-06-10 09:29 GMT   |   Update On 2022-06-10 09:53 GMT
  • கோடை விடுமுறையையொட்டி எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குவிந்து வருகிறார்கள்.
  • பெண் யானையின் எலும்புகூடு, நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு உள்ளிட்டவற்றை மிகவும் வியப்பாக உள்ளது

சென்னை:

கோடை விடுமுறையையொட்டி எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குவிந்து வருகிறார்கள்.

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் பழமைவாய்ந்த ஆங்கிலேயர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் (மியூசியம்) செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் 2-வது பழமையான அருங்காட்சியகமாக திகழ்ந்து வருகிறது. 1851-ம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது ஆகும்.கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகம் முதல் இடத்தில் உள்ளது. கலை, தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல் இன்னும் பல தலைசிறந்த களஞ்சியமான சென்னை அருங்காட்சியகம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இங்கு நமது முன்னோர்களின்வாழ்வியல்,தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

46 காட்சியகங்கள் கொண்ட 6 கட்டடங்கள் உள்ளன. தலைமைக் கட்டடத்தின் கீழ்தளத்தில் சிற்பங்கள்,பழங்கால கல்சிலைகள்,விலங்கியல், பறக்கும் விலங்குகள், வெளிநாட்டு விலங்குகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் பற்றிய காட்சிக்கூடங்கள் உள்ளன.

பெண் யானையின் எலும்புகூடு, நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு உள்ளிட்டவற்றை மிகவும் வியப்பாக உள்ளது. மேலும் டைனோசர் போன்ற எலும்புக்கூடு பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது. தினமும் காலை 9-30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. பெரியவர்களுக்கு ரூ.15,சிறுவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை தினமாகும்.தற்போது கோடை விடுமுறையை யொட்டி அருங்காட்சியகத்தை பார்வையிட ஏராளமான பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள், மாணவர்கள்,வெளியூர் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகிறார்கள்.

அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் அது தொடர்பான விவரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்.மூலம் ஆராய்ச்சி மாணவர்கள் அருங்காட்சியத்தில் உள்ள பொருட்களைப் பற்றி எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பெரிய டிஜிட்டல் எல்.இ.டி, மூலம் விரிவாக பார்வையாளர்களுக்கு விளக்கம் செய்தும்காண்பிக்கப்படுகிறது.

இதன் மூலம் அருங்காட்சியகம் பற்றிய முழு விபரங்கள், தகவல்கள் எளிதில் பார்வையாளர்கள் மனதில் பதிவாகிறது.

Tags:    

Similar News