இந்தியா

கைது செய்தது தெரியாது: அல்லு அர்ஜூன் மீதான வழக்கை வாபஸ் பெற தயார்- உயிரிழந்த பெண்ணின் கணவர்

Published On 2024-12-13 12:10 GMT   |   Update On 2024-12-13 12:10 GMT
  • போலீசார் இன்று அல்லு அர்ஜூன் வீடு சென்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
  • பின்னர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்வா 2 திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க, அல்லு அர்ஜூன் சிக்கடப்பள்ளியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றார்.

அல்லு அர்ஜூன் படம் பார்க்க வந்ததை அறிந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்ப்பதற்காக அதிக அளவில் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்ற 35 வயது பெண் மற்றும் அவரது 8 வயது மகன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சிக்கடப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக போலீசார் எந்த நடவடிக்கையில் எடுக்காமல் இருந்தனர். இந்த நிலையில இன்று ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜூன் வீடு சென்று அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அவரை கைது செய்ததாக அறிவித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.

இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர், வழக்கு திரும்பப்பெற தயாராக இருப்பதாக தகவல் வெளியாகிள்ளது.

அல்லு அர்ஜூன் மக்கள் தொடர்பு குழு, ரேவதியின் கணவர் வழக்கை திரும்பப் பெற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"நான் வழக்கை திரும்பப் பெற தயாராக இருக்கிறேன். அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது பற்றி எனக்குத் தெரியாது. என் மனைவி இறந்த கூட்ட நெரிசலுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" ரேவதியின் கணவர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசலில் ரேவதி உயிரிழந்தது கடந்த 4-ந்தேதியாகும். சமார் ஒருவாரம் கழித்து போலீசார் அவரை கைது சயெ்துள்ளனர். புதிய குற்றவியல் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) கீழ் ரேவதியின் குடும்பத்தினர் கொடுக்க புகார் அடிப்படையில் அல்லு அர்ஜூன் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அல்லு அர்ஜூன், எஃப்.ஐ.ஆர்-ல் இருந்து தனது பெயரை நீக்குமாறு தெலுங்கானா உயர்நீதிமன்றததில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News