துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை.. அட்லஸ் சைக்கிள்ஸ் முன்னாள் தலைவர் உயிரிழப்பு
- வீட்டின் பூஜை அருகே இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார்.
- சலில் கபூரின் மனைவி, குழந்தைகள் தனியாக வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரபல அட்லஸ் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சலில் கபூர் டெல்லியை அடுத்த லுட்யென்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது வீட்டின் பூஜை அருகே இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார்.
உரிமம் பெற்ற துப்பாக்கியால் கபூர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். நிதி நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக சலில் கபூர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மூன்றடுக்கு கொண்ட சலில் கபூர் வீட்டில் அவருடன் அவரது மேலாளர் மற்றும் அவரது குடும்பத்தார் வசித்து வந்துள்ளனர். சலில் கபூரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் தனியாக வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ரூ. 9 கோடி நரையிலா தொகையை ஏமாற்றியதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2015 ஆம் ஆண்டு சலில் கபூரை கைது செய்தது. இதே வீட்டில் கடந்த 2020 ஜனவரி மாத வாக்கில் சலில் கபூரின் உறவினர் நடாஷா கபூர் இதே இல்லத்தில் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.