இந்தியா

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: 2019-ஐ விட 575 சதவீதம் உயர்ந்த பா.ஜ.க. வேட்பாளரின் சொத்து மதிப்பு

Published On 2024-10-30 16:15 GMT   |   Update On 2024-10-30 16:15 GMT
  • 2019-ல் சொத்து மதிப்பு 550.62 கோடி ரூபாய் ஆகும்.
  • தற்போது 3383.06 ரூபாய் என வேட்புமனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 388 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. நேற்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. சுமார் 8 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்கள் தாக்கல் செய்தி பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் பா.ஜ.க. வேட்பாளர் பராக் ஷா மிகப்பெரிய கோடீஸ்வரர் வேட்பாளர் எனத் தெரியவந்துள்ளது.

இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காட்கோபார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2019-ல் அவரது சொத்து மதிப்பு 550.62 கோடி ரூபாய் என பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தார். தற்போது 575 சதவீதம் உயர்ந்து 3383.06 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. அவரது பிரமாண பத்திரம் மூலம் இது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் போட்டியிடும் மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் இவர்தான். பராக் ஷா என்.டி.டி.வி.-க்கு அளித்த பேட்டியில் "நான் நேர்மையான வேட்பாளர்கள். நான் நேர்மையானவன் இல்லை என என்னுடைய எதிரியால் கூட குற்றம்சாட்ட முடியாது. நிறைய பேர் செல்வங்கள் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் அதை நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். நாடு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. ஆகவே, நான் சிலவற்றை கொடுக்க வுண்டும் என நம்புகிறேன். நான் ஒரு தலைவர். தொழில் அதிபர். மேலும் சமூக சேவகர். நான் என்னுடைய சேமிப்பில் இருந்து 50 சதவீதத்தை சமூக சேவைக்காக கொடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News