இந்தியா
விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்து
- விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
- ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
டார்ஜிலிங் மாவட்டத்தில் புதிய ஜல்பால்குரி பகுதியில் கஞ்சன்ஜங்கா விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
மேலும் ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.