இந்தியா (National)
LIVE

அரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-10-05 00:58 GMT   |   Update On 2024-10-05 02:39 GMT
  • 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 20,632 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • முதல்வர் நயாப் சிங் சைனி, வினேஷ் போகத் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். முதல்வர் நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் புாகத், ஜேபிபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட 1027 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 20,632 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

2024-10-05 02:39 GMT

பா.ஜ.க. தலைவர் குல்தீப் பிஷ்னோய் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த காட்சி. அவரது மகன் பவ்யா பிஷ்னோய் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

2024-10-05 01:50 GMT

ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார்.

2024-10-05 01:46 GMT

வாக்குப்பதிவு தொடங்கியதும் மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் தனது வாக்கை பதிவு செய்தார்.

2024-10-05 01:10 GMT

குருஷேத்ரா தானேசர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு மையத்தில் அதிகாரிகள் மாதிரி வாக்குகள் செலுத்தி பரிசோதித்து பார்த்தனர்.

2024-10-05 01:04 GMT

அதம்பூர் தொகுதியில் அதிகாரிகள் வாக்கு செலுத்தில் வாக்கு எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா? என பரிசோதிக்கும் காட்சி.

2024-10-05 01:02 GMT

பச்குலா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு மையத்தில், வாக்கு எந்திரங்களை தயார்படுத்தும் அதிகாரி.

2024-10-05 01:01 GMT

7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்கு போடப்பட்டு பரிசோதனை நடத்திய அதிகாரிகள்.

Tags:    

Similar News