கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும்: பொன்முடி தகவல்
- அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கென தனி ஓய்வறைக் கட்டடம் 8.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
- அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.
சட்டமன்ற கூட்டத்தொடரின் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் பொன்முடி 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட்டார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
1. அச்சு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய 4 சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப 6 புதிய பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
2. கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
3. ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
4. மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிறப்பு பயிலக மாணவர்களுக்காக சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
5. அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கென தனி ஓய்வறைக் கட்டடம் 8.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
6. கோவை, சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் ஆய்வகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
7. திருநெல்வேலி, தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
8. காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகும் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
9. வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருள்சேர் உற்பத்தி ஆய்வகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
10. GATE, IES, CAT, GMAT, GRE, IELTS, TOEFL உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை 500-ல் இருந்து 1400 ஆக உயர்த்தப்படும். இதற்காக கூடுதலாக 77 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
11. அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.
12. அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் 7.05 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
13. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாற்று ஆராய்சி மன்னறம் மீளுருவாக்கம் செய்யப்படும்.
14. திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
15. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் 20 சதவீதம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அந்த மானிய கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.