இந்தியா

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

Published On 2023-08-14 17:01 GMT   |   Update On 2023-08-14 17:01 GMT
  • காவிரி நீர் திறப்பு 9,300 கன அடியாக அதிகரித்துள்ளது.
  • அணைகளில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு 14,300 கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியதன் எதிரொலியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 5,300 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 9,300 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இரு அணைகளில் இருந்தும் தற்பொழுது நீர் வெளியேற்றத்தின் அளவு 14,300 கன அடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News