இந்தியா

வெளிநாட்டு பயணிகளின் விவரங்களை சுங்கத்துறைக்கு தெரிவிக்க விமான நிறுவனங்களுக்கு உத்தரவு

Published On 2024-12-31 01:38 GMT   |   Update On 2024-12-31 01:38 GMT
  • பயணத்தின் நோக்கம், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களை விமானம் கிளம்புவதற்கு 24 மணி நேரத்துக்கு முன் தெரிவிக்க வேண்டும்.
  • பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் வெளிநாட்டு பயணிகளின் விவரங்களை இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை உத்தரவிட்டு உள்ளது. அந்த பயணிகளின் செல்போன் எண்கள், அவர்கள் பயணத்துக்கு கட்டணம் செலுத்திய முறை, டிக்கெட் வழங்கிய தேதி, பயணத்தின் நோக்கம், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களை விமானம் கிளம்புவதற்கு 24 மணி நேரத்துக்கு முன் தெரிவிக்க வேண்டும்.

இந்த நடைமுறை ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தவறும் விமான நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இதற்காக விமான நிறுவனங்கள் அதாவது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் விமானம் இயக்கும் நிறுவனங்கள் தேசிய சுங்க இலக்கு மையத்தில் வருகிற 10-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News