null
விண்கலம் இணைப்பு வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ
- விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது
- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இஸ்ரோ சார்பில் கடந்த மாதம் 30-ந்தேதி ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடேக்ஸ் பி ஆகிய 2 செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இதைதொடர்ந்து, விண்வெளியில் 2 செற்கைக்கோள்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த 'ஸ்பேடேக்ஸ்' திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.
2 செயற்கைக்கோள்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, விண்ணில் செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூபித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், விண்வெளி டாக்கிங் பரிசோதனை வெற்றி தொடர்பான வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.