இந்தியா
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
- பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்தார்.
- கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொலைபேசியில் பேசிய மர்ம நபர், பவன் கல்யாணை அவதூறாக பேசியும், எச்சரித்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பவன் கல்யாண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக மல்லிகார்ஜுன ராவ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் அவ்வாறு பேசியதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.