இந்தியா

சத்தீஸ்கரில் 2 டிப்பர் லாரிகளுக்கு தீ வைத்த மாவோயிஸ்டுகள்

Published On 2023-05-01 15:21 IST   |   Update On 2023-05-01 15:21:00 IST
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்ககை எடுத்து வருகிறது.
  • சுக்மா மாவட்டம் இட்டாபுரம் என்ற ஊரில் கட்டிட வேலை நடந்து வரும் பகுதியில் 2 டிப்பர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்ககை எடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 4 பேர் சரண் அடைந்து தாங்கள் திருந்தி வாழபோவதாக தெரிவித்தனர். மற்ற மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சுக்மா மாவட்டம் இட்டாபுரம் என்ற ஊரில் கட்டிட வேலை நடந்து வரும் பகுதியில் 2 டிப்பர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த 2 லாரிகளுக்கும் நேற்று இரவு மாவோயிஸ்டுகள் தீ வைத்தனர். இதில் அந்த லாரிகள் முற்றிலும் எரிந்து சேதமானது.

Tags:    

Similar News